ஸ்ரீ ஆதிசங்கரர் நமக்கு ஏற்படுத்திக் கொடுத்த ஓர் சமய மார்க்கம் தான் "சாக்தம்' (சக்தி வழிபாடு). சக்தி வழிபாட்டை வேதகாலத்திலேயே நம்முடைய முன்னோர்கள் கடைபிடித்துள்ளனர். பராசக்தி, அம்பிகை, பகவதி, லலிதா, ராஜேஸ்வரி, புவனேஸ்வரி, துர்க்கை போன்ற திருநாமங்களால் (வடிவம்) பக்தர்கள் போற்றி வணங்கி வருகிறார்கள்.
இவளே பிரபஞ்சத்தின் தாயாகவும் விளங்கு கிறாள்.
ரிக் வேதத்தில்தான் தேவி சூக்தம், ஸ்ரீ சூக்தம் போன்ற சக்தி வழிபாட்டு துதிகள் வருகிறது. நம்முடைய அன்றாட வழிபாட்டுக்கு அடிப்படையாக இருப்பது. காயத்ரி (ஆசீர்வதிக்கப்பட்ட அன்னை) மந்திரம். பகவான் கீதையில் மந்திரங்களில் நான் காயத்ரி மந்திரமாக இருக்கிறேன் எனக் கூறினார். எந்த சக்தியான ஜோதி ஸ்வரூபம் நம்முடைய அறிவைத் தூண்டுகி றதோ அந்த சக்தியை பெண் தெய்வமான காயத்ரி பெயரில் விஸ்வாமித்திர மகரிஷி இம்மந்திரத்தை உபதேசித்தார்.
இந்த பராசக்தி ஆனவள் இவ்வுலகில் வாழும் மனிதர் உட்பட அனைத்து ஜீவராசிகளையும் தன்னுள் அடக்கி வைத்துள்ளாள். என்பதை "ஏகை வாஹம் ஜகத்யத்ர த்விதீயா கா மமாபரா'' என ஸப்தசதீயில் சொல்லப் பட்டுள்ளது. மாணிக்கவாசகர் அன்னையைப் போற்றும்விதமாக தாயாகி என்னை வளர்த்தனை போற்றி எனப் பாடினார்.
சைவ திருக்கோவில்களில் "அம்பாள்' எனவும், வைணவத் திருக்கோவில்களில் "தாயார்' எனவும், கிராமப்புறங்களில் மாரியம்மன், அங்காளபரமேஸ்வரி, துர்க்கை, பெரிய நாயகி, காளி போன்ற பெயர்களில் பெண் தெய்வங்களை அழைப்பதுண்டு.
கிராம தேவதையாகவும், பல குடும்பங் களுக்கு குலதெய்வமாகவும் பக்தர்களைக் காக்கும் பெண் தெய்வமாக ஆதி பராசக்தி யானவள் ஸ்ரீ பெரியாண்டவர் எனும் பெயரில் நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் எனும் கிராமத்தில் குடிகொண்டு அருள்பாலித்து வருகிறாள்.
துர்க்கை, காளி வழிபாட்டை பண்டைய தமிழர்கள் போரில் வெற்றியைத் தரும் பெண் தெய்வத்தை "கொற்றவை' எனும் பெயரில் அழைத்து வழிபட்டனர். கொற்றவை பற்றி சிலப்பதிகாரத்தில் (வேட்டுவ வரி) புகழ்ந்து பாடப்பட்டுள்ளது. துர்க்கை வழிபாட்டில் காட்டில் இருந்த வனதுர்க்கை வழிபாடும் இதில் அடங்கும். இந்த வழிபாடு தீயோர்கள், எதிரிகளிடமிருந்து காக்க உதவியது. மிகவும் உக்ரமான உருவத்தில் வனதுர்க்கை காட்சி யளித்ததால் காக்கும் தெய்வமாக முதலில் அறியப்பட்டாள்.
சிலநூற்றாண்டு களுக்குமுன்பு புதுச்சத்திரம் அருகேயுள்ள இன்றைய கண்ணூர்ப்பட்டி எனும் கிராமம், அன்று அடர்ந்த காடாக இருந்தது. நாளடைவில் காட்டை சீராக்கி மனிதர்கள் வாழத் தகுந்த இருப்பிடமாக மாற்றத் தொடங்கிய கால கட்டத்தில் சில அந்தணர்கள் இவ்விடத்தில் குடியேறி அக்ரஹாரத்தை ஏற்படுத்தினார்கள்.
காலப் போக்கில் கிராமத்தில் வசிப்பவர்களை துன்புறுத்தி அவர்களின் செல்வங்களை காட்டிலிருந்து வந்த திருடர்கள் அபகரித்துச் செல்லத் துவங்கினார்கள். இதை கிராமவாசிகள் எவ்வளவு போராடியும் திருடர்களை சமாளிக்க முடியவில்லை.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/03/amman1-2025-12-03-17-03-59.jpg)
இந்த சோதனையை எப்படி மேற்கொள்வது என கண்ணூர்ப்பட்டி கிராமவாசிகள் யோசித்தபோது ஊர் பெரியவர்கள், வேதம் படித்தவர்கள் ஊரைக்காக்க ஓர் காவல் தெய்வத்தை நிறுவி வழிபடலாம் எனச் சொல்ல, அந்தவகையில் ஆதிபராசக்தியான வனதுர்க்கையை "பெரியாண்டவர்' எனும் பெயரில் தீயவர்களை அழிக்கக்கூடிய சக்திவாய்ந்த யத்திரத்துடன் அம்பாளை பிரதிஷ்டை செய்தனர். சக்திவாய்ந்த இந்த அம்மன் தங்களைக் காப்பாள் என்கிற நம்பிக்கை ஊர் மக்களிடம் இருந்தது. ஊர் கிராமமக்கள் பக்தியுடன் தினமும் பூஜை செய்து வழிபடத் தொடங்கினார்கள். இதன் பயனாக திருடர்களின் பயம் நாளடைவில் குறையத் தொடங்கி மக்கள் நிம்மதியாக வாழத் தொடங்கினார்கள்.
மிகவும் உக்ரமான தேவதையாக விளங்கிய "பெரியாண்டவர்' அம்மன் நேரடியாக நின்ற கோலத்தில் இருந்தால் உக்ரநிலை அதிகமாக இருக்கும் என்பதால் படுத்த கோலத்தில் வானத்தைப் பார்த்த வண்ணம் உருவாக்கப்பட்டது.
இதுபோன்று படுத்தநிலையில் அம்மன் கோவில்கள் தமிழகத்தில் பொள்ளாச்சி (ஆனைமலை) அருகே ஸ்ரீமாசாணி அம்மன் கோவில், அரியலூரில் (மேலத் தெரு) ஸ்ரீபெரிய நாயகி அம்மன் கோவில், கைக்கோள் முதலியார் சமூகத்தின் குலதெய்வமான ஸ்ரீ வண்டிமலைச்சியம்மன் கோவில் திருநெல்வேலி (அத்தாள நல்லூர்), ஈரோடு நகரில் (காவேரி கிராமம்) பெரியாயி (பெரியம்மா) எனும் பெயரில் அம்மன்கோவில் என இப்படி பல கோவில்கள் உள்ளன.
தங்களின் கிராமத்தைக் காக்கும் பெரியாண்டவர் அம்மன் உக்ர நிலையில் இருப்பதால் சிலர் அம்மனை வழிபடவே பயந்தனர். இந்த நிலையைப் போக்க மகான்களின் ஆலோசனையின் பேரில் அம்மனை சாந்தப்படுத்தும்வண்ணம் யந்திரங்களை 1910-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அதன்பின்னர் ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம், ஸ்ரீதுர்க்கா ஸப்தசதீ போன்ற அம்மனைக் குறித்த துதிக்கும் ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்யும் வழக்கம் ஏற்பட்டது. இன்று கோபம் தனிந்த நிலையில் அம்மன் அருள்பாலித்து வருகிறாள்.
அம்மன் சன்னதியில் ஸ்ரீ வல்லப கணபதி, ஸ்ரீ சுப்ரமணியர், ஸ்ரீ மதுரை வீரன் ஆகிய தெய்வ சன்னதிகள் படிப்படி யாக உருவாக்கப்பட்டது. 1977-ஆம் ஆண்டு இக்கோவில் கும்பாபிஷேகம் சேலம் ஸ்கந்தாசரமத்தை உருவாக்கிய புதுக்கோட்டை ஸ்ரீ சாந்தானந்த ஸ்வாமிகளால் நடத்தி வைக்கப்பட்டது. சிருங்கேரி சங்கராச்சார்ய ஸ்ரீ பாரதி தீர்த்த ஸ்வாமிகளின் சேலம் மாவட்ட விஜயம் சமயத்தில் இக்கோவிலுக்கு விஜயம் செய்துள்ளார். இதுபோன்ற அருளாளர்கள் பலர் விஜயம் செய்து இருக்கிறார்கள்.
2016-ஆம் ஆண்டு நெரூர் ஸ்ரீ வித்யா சங்கர சரஸ்வதி ஸ்வாமிகள் பெரும் முயற்சியால், அவரது முன்னிலையில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
காக்கும் தெய்வமாக விளங்கும் ஸ்ரீ பெரியாண்டவர் அம்மனின் மகிமையைப் பற்றி நெரூர் ஸ்வாமிகள் கூறும்போது, "ஸ்ரீ பெரியாண்டவர் எனும் பெயரில் அம்மன் இக்கோவிலில் குடி கொண்டு இருக்கிறாள். பெண் தெய்வமான அம்மனை ஆண்டவர் என்கிற பெயரில் மரியாதையுடன் அழைக்கப்பட்டு வருகிறாள்.
அடியேன் (ஸ்வாமிகள்) சிறு வயதில் இக்கோவிலுக்கு புதுச்சத்திரத்திலிருந்து அன்றைக்கு மாட்டு வண்டியில்தான் வருவது வழக்கம். இன்று நல்ல சாலை வசதி, வாகன வசதிகள் ஏற்பட்டுவிட்டன.
தங்களின் வேண்டுதல் நிறைவேற இந்த அம்மனுக்கு புடவையை சாத்தி வழிபடுவது என்கிற வழக்கம் தொன்றுதொட்டு வருகிறது. கருணைக்கடலான அம்மனின் கருணையால் இன்று கண்ணூர்ப்பட்டியும், சுற்றியுள்ள கிராமங்கள் செழிப்பாக உள்ளது'' என பெருமிதத்துடன் கூறினார்.
"யாதேவீ ஸர்வபூதேஷூ சேதனேத்யபிதீயதே
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம'
என்கிற ஸ்ரீ தேவிமாஹாத்ம்யம் ஸ்லோகம் படி ஸ்ரீ பெரியாண்டவர் என்கிற தேவி எல்லா உயிரினங்களுக்கும் உயிர்நாடியாக இருந்து காப்பாற்றி வருகிறாள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/03/amman-2025-12-03-17-03-49.jpg)